• Jul 26 2025

கடைசி நாமினேஷனில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது இதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர். அத்தோடு இந்த வாரம் முழுவதும் விருந்தினர்கள் இந்த வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இருப்பினும் தமிழ் சினிமாவில் துணிவு மற்றும் வாரிசு படங்கள் வெளியாகவே பிக்பாஸ் பற்றிய பேச்சு கடந்த சில நாட்களாக கொஞ்சம் குறைந்துவிட்டது. இப்போது மீண்டும் ரசிகர்களால் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில்  வீட்டில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் அசல் கோளாறு  சாந்தி மாஸ்டர் ஜி.பி முத்து தனலக்ஷ்மி மணிகண்டன் ஆகியோர்  நுழைந்துள்ளனர், கொஞ்சம் கலகலப்பாக நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.


அடுத்து என்ன எலிமினேஷன் தான், யார் கடைசியாக வீட்டைவிட்டு வெளியேறப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.இந்த வாரம் எலிமினேஷனுக்கு அசீம், விக்ரமன், ஷிவின், மைனா, கதிரவன் மற்றும் ADK ஆகியோர் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகியுள்ளனர். இதில் இப்போது வரை குறைந்த வாக்குகள் பெற்று கடைசியில் இருப்பது ADK தான், அவருக்கு முந்தைய இடத்தில் கதிரவன் இருக்கிறார்.

எனவே இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.பெரும்பாலும் ஏடிகே தான் வெளியேறுவர் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement