• Jul 26 2025

துணிவு படமா... வாரிசு படமா... பொங்கல் கலெக்‌ஷன் இதுதானாம்.. கூல் சுரேஷ் பளிச்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 இந்த பொங்கலுக்கு துணிவு திரைப்படம் அதிகம் கலெக்‌ஷன் அள்ளுமா? அல்லது வாரிசு படம் அதிகம் கலெக்‌ஷன் அள்ளுமா என்கிற கேள்விக்கு நடிகர் கூல் சுரேஷ் அளித்த பதில் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்ற பஞ்ச் வசனம் ஹாஷ்டேக்காக டிரெண்டாகி வருகின்றது. #5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும் ஹாஷ்டேக்கில் பாஜகவினர் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.டாஸ்மாக் வசூல் குறித்து நடிகர் கூல் சுரேஷ் பேசிய வீடியோவை நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கே ரிலீஸ் ஆன நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அதன் வசூல் வாரிசு படத்தின் வசூலை விட சற்றே அதிகமாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரியல் பாக்ஸ் ஆபிஸை தயாரிப்பு தரப்பு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு துணிவு திரைப்படம் ஒட்டுமொத்தமாக 23 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாரிசு படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் படங்கள் வெளியாகாத நிலையிலேயே இந்தியளவில் வாரிசு திரைப்படம் 25 கோடி ரூபாய் வசூல் வேட்டையை முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அத்தோடு  கேரளாவில் மட்டும் முதல் நாளே 4.5 கோடி ரூபாய் வசூல் சாதனையை வாரிசு பெற்றுத்துள்ளது.

அத்தோடு கடந்த ஆண்டு விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் வலிமை படத்துக்கு கிடைத்ததை போலவே இந்த ஆண்டும் வாரிசு மற்றும் துணிவு என இரு படங்களுக்குமே நெகட்டிவ் விமர்சனங்கள் இரண்டாம் நாள் வெளியாக ஆரம்பித்துள்ளன. முதல் நாளில் படத்தை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், இரண்டு படங்களையும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மாறி மாறி கலாய்த்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட விமர்சகர்கள் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என்றே தெரிவித்தார்.

இவ்வாறுஇருக்கையில் , தியேட்டர்களில் FDFS கொண்டாட்டங்களில் களைகட்டி வரும் காமெடி நடிகர் கூல் சுரேஷ் பேசிய பேச்சு டிரெண்டாகி வருகின்றது.அத்தோடு இந்த பொங்கலுக்கு துணிவு படமா? வாரிசு படமா? எது அதிக கலெக்‌ஷன் அள்ளும் பொங்கல் வின்னர் யார் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொன்னால், விஜய் அல்லது அஜித் ரசிகர்களிடம் அடி கன்ஃபார்ம் என்பதால் தனது பேச்சையே மாற்றி விட்டார்.

மேலும் இந்த பொங்கலுக்கு வாரிசு படமும் இல்லை துணிவு படமும் இல்லை டாஸ்மாக் தான் வின்னர் என அரசை விமர்சிக்கும் வகையில் கூல் சுரேஷ் பேசிய பேச்சை பாஜவை சேர்ந்த சிடிஆர் ரவி ஷேர் செய்து #5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும் என்கிற ஹாஷ்டேக்கை போட்டு திமுகவினரை ட்ரோல் செய்து வருகிறார்.

Advertisement

Advertisement