• Jul 25 2025

39 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் நடிகை சதா... எதனால் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் கடந்த 2003ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமகமாகியவர் தான் சதா. இப்படத்தில் இவர் போய்யா என கையை காட்டி செல்லமாக ஜெயம் ரவியை போக சொல்லும் காட்சி பல பெண்களை அப்படியே அந்த நேரத்தில் செய்யத் தூண்டியது. கவிதையே தெரியுமா பாடல் ஒலிக்காத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு செம ஹிட் அடித்தது.


இதனால் இவருக்கு படவாய்ப்புக் குவியத் தொடங்கியதால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் இவர் 'எலி' படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார். சதாவுக்கு தற்போது 39 வயதாகிறது. இன்றுவரை திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருகின்றார்.


இந்நிலையில் திருமணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சதா கூறுகையில் "திருமணம் செய்து கொண்டால் சுதந்திரத்தை இழக்கிறோம். திருமணம் செய்பவர் புரிந்து கொள்ளலாம் அல்லது புரியாமல் இருக்கலாம். நான் வனவிலங்குகளை ரொம்பவும் விரும்புகிறேன். அவ்விலங்குகளை நேசிக்கிறேன். நான் திருமணம் செய்து கொண்டால், என் ஆசைகளைத் தொடர முடியாமல் போகலாம்" என்றார்.


மேலும் "பல திருமணங்கள் வெற்றியடைவதில்லை. பலர் பிரிந்து செல்கின்றனர். அதனால் தான் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை" எனவும் கூறியுள்ளார் நடிகை சதா.

Advertisement

Advertisement