• Jul 24 2025

ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகளா இவர்... இந்தளவிற்கு வளர்ந்து விட்டாரே...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட சினிமாவின் கனவு நாயகிகளில் ஒருவராகக் கொண்டாடப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். தமிழ் சினிமாவில் முன்னணி வகித்த நடிகையாகத் திகழ்ந்த இவர் திரையுலகப் பின்ணியைக் கொண்ட கொண்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத வரவேற்பைப் பெற்றார்.


இவர் குழந்தை நட்சத்திரமாக 1992 இல் 'ரிக்சா மாமா' திரைப்படத்தில் தோன்றினார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். மேலும் 'அம்மா வந்தாச்சு, ருக்மணி, காதல் வைரஸ், பிரியமான தோழி, தித்திக்குதே' போன்ற நம் நெஞ்சை விட்டு அகலாத பல படங்களில் நடித்துள்ளார்.


இவரது நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த 'பிரியமான தோழி' என்ற நம்மால் மறக்க முடியாது. இப்படத்திற்காக இவர் சிறந்த நாயகிக்கான பிலிம்பேர் விருதினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக தனது நடிப்பினை வெளிப்படுத்தி வந்த ஸ்ரீதேவி 2009-ஆம் ஆண்டு ராகுல் என்பவரை மணம் புரிந்து திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ரூபிகா என்றொரு மகளும் உண்டு.


திருமணத்தை தொடர்ந்து படங்களில் நடிக்கவிட்டாலும் ஸ்ரீதேவி தற்போது வரை சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகவே இருந்து வருகின்றார். அந்தவகையில் தற்போதும் தனது மகள், மற்றும் கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "உங்கள் மகள் இந்தளவிற்கு வளர்ந்து விட்டாரா" எனக்கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement