• Jul 25 2025

விஜய்யின் மகன் சஞ்சய் லைகா நிறுவனத்துடன் கூட்டணி அமைக்க யார் காரணம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் தான் விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதனை அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் பூஜை வீடியோ நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.

இவரது மகன் ஜோசன் சஞ்சய் கல்லூரி படிப்பை முடித்துவிட்ட நிலையில், சினிமாவில் ஹீரோவாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ இயக்குநராக வேண்டும் என்பதே தனது கனவு என தனித்து பறந்துகொண்டிருக்கிறார்.

படித்துக்கொண்டிருந்தபோதே சஞ்சய் புல் தி ட்ரிக்கர் என்ற குறும்படத்தை இயக்கினார். அதில் அவரது மேக்கிங்கும், இயக்கமும் நன்றாகவே இருந்ததாக பேச்சு எழுந்தது. மேலும் அந்த குறும்படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பலரையும் ஈர்த்தது.


இந்நிலையில் சஞ்சய் இயக்குநராக அறிவிக்கப்பட்டவுடன் அவருக்கு வாழ்த்துகளும் வந்தன விமர்சனங்களும் வந்தன. மேலும் பிரபலத்தின் மகன் என்பதால் எளிதாக வாய்ப்பு கிடைத்துவிட்டதாக ஒருதரப்பினர் கூறினர். இந்த சூழலில் அவர் இயக்குநராவதற்கு லைகாவிடம் பேசி வாய்ப்பை பெற்று தந்தவர் குறித்து தெரியவந்திருக்கிறது. 

அதாவது விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு தனது மகன் நடிகர் ஆகாமல் இயக்குநர் ஆக வேண்டுமென்பதே ஆசையாம். அதனையடுத்துதான் அவர் நேரடியாக லைகாவிடம் பேசி இந்த வாய்ப்பை பெற்றுக்கொடுத்ததாக பத்திரிகையாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement