• Jul 24 2025

ஓவரா ஆடாத ,ஒழுங்கா பேசு மாயாவை திட்டிய விசித்ரா... கோபத்தில் பொங்கி எழுந்த மாயா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சிறப்பாக ஒளிபரப்பாகி ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது படு பயங்கரமாக சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் போட்டியாளர்களாக பங்குபற்றியுள்ள பூர்ணிமா ,மாயா , விசித்ரா இவர்களிடையில் ஒரு வாக்கு வாதம் நடைபெறுகிறது.


பூர்ணிமா விசித்ரா தயாராகி வராவிட்டாலும் பரவாயில்லை நீங்கள் வந்து இருங்கள் என்று போட்டியாளர்களிடம் சொன்னதாக கூறுகிறார். அதற்கு விசித்ரா நான் தயாராகி கொண்டிருந்தேன் என்று கூறுகிறார். பிக் பாஸ் சொல்லியிருக்கிறார் காலை செயற்பாடுகள்  உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று  அதனால் தான் தயாராகி இருக்கிறோம் என்று கூறுகிறார் பூர்ணிமா. 


விசித்ரா சில நேரங்களில் நாங்கள் மூன்றாவது அழைப்பு வந்த உடன் கூட ஆரம்பித்து இருக்கிறோம் என்று சொல்ல அதற்கிடையில் மாயா வேகமாக எழும்பி ராசி மூன்றாவது அழைப்பு வந்ததும் சொல்லுங்கள் வருகிறோம் என கூறுகிறார்.  விசித்ரா மாயாவை பார்த்து ஓவரா ஆடாத ,ஒழுங்கா பேசு , இந்த மாதி பேசுனா எல்லாம் பயப்பிடுற ஆள் நான் கிடையாது என்று சொல்கிறார். 


இதனை கேட்ட மாயா கோபத்தில் நீக்க முதல்ல ஒழுங்கா பேசுங்க, ஓவரா ஆடாதன்னு  என்ன சொல்ல வேணாம் என்று கூற இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெறுகிறது. இது பெரிய சண்டையில் பொய் முடியும் முதல் பிக் பாஸ் முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும். 

Advertisement

Advertisement