• Jul 26 2025

நடிகை விஷாகா சிங்கை நினைவிருக்கா.. அடடே அவர் எப்பிடி இருக்கிறார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தவர் விஷாகா சிங். அந்த படம் காமெடிக்காக பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அதன் பின் விஷாகா சிங் வாலிப ராஜா உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.


அதன் பின் வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். எனினும் தற்போது ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.


நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது சொந்தமாக பட தயாரிப்பு தொழில் செய்து வரும் விஷாகா சிங், WazirX NFT Marketplaceல் VP ஆக இருந்து வருகிறார்.


அது மட்டுமின்றி மேடை பேச்சை பல வெளிநாடுகளிலும் செய்து வருகிறார். அத்தோடு மெட்டாவர்ஸ், NFT, Web3, Crypo போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டி வரும் அவர் அது பற்றிய conferenceகளில் மேடை பேச்சாளராக பங்கேற்று பேசி வருகிறார்.


மேடை பேச்சு தனது 6 வயதில் இருந்தே செய்து வருவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.


Advertisement

Advertisement