• Jul 26 2025

டைட்டில் வென்ற அசிமின் அடுத்த ப்ளான் இதுதானா.? அவரே சொன்ன விசயம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கிராண்ட் ஃபினாலே பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

இவ்வாறுஇருக்கையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவில் பேசிய கமல், வீட்டுக்குள் இருப்பவர்களிடம் பேசலாம், அகம் டிவி வழியே அகத்துக்குள் என சொல்ல, அகம் டிவி வழியே, விக்ரமன், ஷிவின் மற்றும் அசிம் ஆகியோரிடம் கமல் அகம் டிவி வழியே பேசிக்கொண்டிருந்தார். வீட்டுக்குள் எஞ்சி இருந்த இறுதி போட்டியாளர்களான விக்ரமன், ஷிவின், அசிம் ஆகியோர் அகம் டிவியில் தங்களை பார்த்து பேசிக்கொண்டிருந்த கமல்ஹாசனுக்கு ரெஸ்பான்ஸ் செய்துகொண்டிருக்க, அதேவீட்டுக்குள் இன்னொரு கமல் நுழைகிறார்.


எனினும் அப்போது டிவியில் இருக்கும் கமல், வீட்டுக்குள் நுழையும் அந்த கமலை பார்த்து, “அங்கயுமா?” என ஆச்சரியப்பட, பின்னால் திரும்பிப் பார்த்த இறுதி ஹவுஸ்மேட்ஸூம் ஆச்சர்யத்தில் உறைந்தனர். இதன் பின்னர்தான் அது ப்ரீ ரெக்கார்டு செய்யப்பட்ட வீடியோ போல என ஷிவின் உணர்ந்துச் சொன்னார். 

அதன் பின்னர் ஹவுஸ்மேட்ஸ்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல், மூவருக்கும் தம் சார்பில் நெகிழ்ச்சியுடன் ஒரு வாழ்த்துக் கடிதம் கொடுத்திருந்தார். பின்னர் வெளியில் சென்று யார் யார் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என கமல்ஹாசன் அவர்களிடம் வினவினார்.


மேலும் இதில் அசிம்  கூறும்போது, “மீடியா மற்றும் சின்னத்திரையில் எனது 14 வருச போராட்ட வாழ்வுக்கு பின், எனது அடுத்த கட்ட திரை வாழ்க்கைக்கு பிக்பாஸ் உதவும் என்கிற நம்பிக்கையுடன் வந்தேன். அது நடந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், அசிம், தமது அடுத்த கட்ட திரை வாழ்க்கை என சொல்வது வெள்ளித்திரையா? என கேள்விகள் கேட்டு வருவதுடன், பலரும் அசிம் வெள்ளித்திரைக்கு வர இப்போதே தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


இதனிடையே நடந்து முடிந்த கிராண்ட் ஃபினாலேவில் விக்ரமன் & அசிம் இருவரில் அசிமின் வெற்றியை அறிவிப்பதற்கு முன்பாக, கையை மாற்றி மாற்றி ஆட்டி விளையாட்டு காட்டிய கமல் இறுதியாக அசிம் வெற்றி பெறுவதாக அறிவித்தார். அத்தோடு வெற்றி பெற்ற அசிம் கோப்பையை உயர்த்திக்காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அத்துடன், அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுக்கான காசோலையும், இந்தியாவில் அறிமுகமாகும் மாருதி சுசுகி காரின் பிரஸ்ஸா எனும் மாடலின் முதல் காரும் பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement