• Jul 25 2025

தியேட்டர் கட்டுறேனா..? மறுத்த நயன்தாரா..இது பெரிய உருட்டா இருக்கே வியந்து பார்த்த விக்னேஷ் சிவன்.!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

வடசென்னையின் அடையாளமாக உள்ள அகஸ்தியா திரையரங்கம் கொரோனாவிற்கு பிறகு மூடப்பட்டது. இதனை நயன்தாரா வாங்கி மல்டிபிளக்ஸ் திரையரங்கம் கட்டப் போகிறார் என்ற செய்தி பரவியது.

நயன்தாரா பற்றிய வதந்திகளுக்கு நாங்கள் பதில் கூற முடியாது, பத்திரிகைகள் நீங்களே எழுதி, நீங்களே என்னிடம் வந்து கேட்பது நியாயமா! என்று அகஸ்தியா அறக்கட்டளை நிறுவன பொறுப்பாளர்கள் பேசியுள்ளனர். இந்த செய்தி முதலில் வெளியான போது நிஜமாகவே நயன்தாரா பழைய தியேட்டரை வாங்கி, அந்த இடத்தில் நவீன முறையில் மல்டிபிளக்ஸ் தியேட்டரை கட்ட இருக்கிறார் போல என அனைவருமே நம்பி விட்டனர்.

தற்பொழுது புதிதாக வடசென்னை பகுதியில் பழைய தியேட்டர் ஒன்றை விலைக்கு வாங்கி நவீன முறையில் தியேட்டரைக் கட்டி போகிறார் போல என்ற பரபரப்பான வதந்தி கிளம்பியது.

ஆனால் தீவிரமாக விசாரித்து பார்க்கும் போது தான், அது அறக்கட்டளைக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வதந்தியை கேள்விப்பட்டதும் ‘பெரிய உருட்டா இருக்கே!’ என நயன்தாராவின் காதல் கணவர் விக்னேஷ் சிவன் வியந்து பார்க்கிறார்.

எனவே அகஸ்தியா தியேட்டரை வாங்கியதாக வெளியான தகவலை நயன்தாராவும், கணவர் விக்னேஷ் சிவனும் மறுத்துள்ளதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement