• Jul 24 2025

டேட்டிங் அழைத்து டார்ச்சர் செய்த டாப் ஹீரோ? - உண்மையை போட்டுடைத்த ஹன்சிகா -காட்டுத் தீ போல பரவி வரும் தகவல்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

வட இந்தியாவை சேர்ந்தவரான நடிகை ஹன்சிகா மோத்வானி, ஸ்கூல் படிக்கும்போதே சினிமாவில் காலடி எடுத்து வைத்துவிட்டார். அந்த வகையில் அவரை முதலில் பேமஸ் ஆக்கியது தமிழ் சினிமா தான். 

கடந்தாண்டு தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் ஹன்சிகா, தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களாக நடிகை ஹன்சிகா பற்றிய ஹாட் தகவல் ஒன்று தெலுங்கு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதன்படி நடிகை ஹன்சிகா திரையுலகிற்கு வந்த புதிதில் அவருக்கு பிரபல நடிகர் ஒருவர் தன்னுடன் அடிக்கடி டேட்டிங் வருமாறு அழைத்து டார்ச்சர் பண்ணியதாகவும், அவருக்கு தான் தக்க பாடம் புகட்டியதால், அதன்பின் அவர் தன் பக்கமே வருவதில்லை என அவர் பேட்டி ஒன்றில் கூறியதாகவும் தகவல் வெளியாகி காட்டுத்தீ போல் பரவியது. ஹன்சிகாவுக்கு டார்ச்சர் கொடுத்த நடிகர் யார் என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.

இந்த விஷயம் நடிகை ஹன்சிகாவின் காதுக்கு செல்ல, அவர் இதுகுறித்து அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி அந்த செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை டுவிட்டரில் ஷேர் செய்து, ‘நான் எந்த ஒரு பேட்டியிலும் இப்படி ஒரு கருத்தை சொல்லவில்லை. தயவுசெய்து கண்டதை எழுதுவதை நிறுத்துங்கள்” என காட்டமாக பதிவிட்டு தன்னைப்பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement