• Jul 25 2025

நாகசைத்தன்யாவுக்கு கொடுக்க வேண்டுமா?- ஹைதராபாத்தில் அவசர அவசரமாக பிரமாண்ட வீடு வாங்கிய சமந்தா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரை உலகில், பான் இந்தியா பிரபலமாக அறியப்படுபவர் சமந்தா. இவர் சமீபத்தில்  மும்பையில், ரூபாய் 15 கோடி மதிப்பிலான அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வீடு இருக்கும் போதே மீண்டும் மற்றொரு வீட்டை வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது

 சமந்தா ஜூப்ளிக் ஹில்ஸ் பகுதியில் தற்போது வசித்து வரும் வீட்டை, சமந்தா சந்தை மதிப்பை விட அதிக பணம் கொடுத்து வாங்கினாராம். இந்த வீட்டின் மதிப்பு இப்போது சுமார் 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தன்னுடைய கணவர், நாக சைதன்யாவுடன் இணைந்து இந்த வீட்டை வாங்கினார் சாம். சைதன்யாவை விட இவர் தான், இந்த வீட்டில் அதிக பணத்தை முதலீடு செய்ததாகவும், இதன் காரணமாகவே நாக சைதன்யா இந்த வீட்டை சமந்தாவிடவே ஒப்படைத்து விட்டதாகவும் கூறப்பட்டது.


ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதே போல் சைதன்யா சமந்தாவும் பிரிந்த பின்னர் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் அமைத்துள்ள, தன்னுடைய தந்தையின் வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் அதே பகுதியில் புதிய ஃபிளாட் ஒன்றை வாங்கியதாக கூறப்பட்டது.

திடீர் என சமந்தா, ஹைதராபாத்தில் மற்றொரு வீட்டினை கோடி கணக்கில் பணம் செலவு செய்து வாங்கியுள்ளதால், தற்போது வசித்து வரும் வீட்டில் இருந்து வெளியேற உள்ளாரா? என்கிற என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். என்ன தான் நடக்குது என பொறுத்திருந்து பார்ப்போம்.


மேலும் சமந்தா தற்போது பிரியங்கா சோப்ரா நடித்த வெளியான, சீட்டாடல் தொடரின் இந்திய பதிப்பில் நடித்து வருகிறார். அதே போல் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக, குஷி படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement