• Jul 23 2025

நடிகர் விஜய் பெற்றோரை மதிப்பதில்லையா? அவரது தந்தை எஸ்ஏசி கூறிய பதில்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்து முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.இவரை திரையுலகில் கொண்டு வந்தவரே அவரது அப்பா எஸ்ஏசி தான்.

மேலும்  அவர்கள் இருவருக்கும் சமீப காலமாக பிரச்சனை இருப்பது வெளிப்படையாகவே தெரிந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் எஸ்ஏசி அது பற்றி கூறி இருக்கிறார்.

அதாவது "சம்பாதிக்க ஆரம்பித்தால் பெற்றோரை மதிப்பதில்லை என நான் பொதுவாக தான் கூறினேன். விஜய்யை குறிப்பிட்டு கூறவில்லை. என் வயதுக்கு நான் பல குடும்பங்களை பார்த்திருக்கிறேன் அதை பற்றி தான் கூறினேன். இந்த விஷயத்தில் விஜய் இந்த உலகத்திலேயே சிறந்தவர்" என எஸ்ஏசி தெரிவித்தார்.

அத்தோடு என்ன தான் பிரச்சனை என கேட்டதற்கு "எந்த வீட்டில் தான் பிரச்சனை இல்லை. உங்க வீட்டில் அப்பா எதாவது சொன்னால் உங்களுக்கு கோபம் வருவதில்லையா , இரண்டு நாள் கழித்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது இல்லையா" என அவர் தொகுப்பாளரை திருப்பி கேட்டிருக்கிறார்.

 வாரிசு படம் பற்றி கேட்டதற்கு, 'அதன் கதை என்ன என்பது கூட எனக்கு தெரியாது. அதில் நான் தலையிடுவதில்லை' என எஸ்ஏசி பதில் அளித்திருக்கிறார்.  







Advertisement

Advertisement