• Jul 24 2025

ஜோடியாக பிக்பாஸ் வீட்டு ஜெயிலுக்குள் சென்ற காதல் ஜோடி-வெளியானது வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாதவாறு நகருகின்றது.அந்தவகையில் இந்த வாரத்திற்கான டாஸ்க்காக ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு பிக்பாஸ் வீடு ராயல் அருங்காட்சியகமாக அச்சு அசல் மாறி உள்ளது. 

இதில் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில் அரசராக ராபர்ட் மாஸ்டர், அரசியாக ரச்சிதா, தளபதியாக அசீம், ராஜ குருவாக விக்ரமன், இளவரசராக மணிகண்ட ராஜேஷ், இளவரசியாக ஜனனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.அதில் நிறைய கோபம் சண்டை அழுகை என மாறி மாறி இடம்பெற்றது.

இந்நிலையில் இந்த டாஸடகில் அதிகம் ஈடுபாடு காட்டாமல் போராக விளையாடியது யார் என்று கேட்டதற்கு பலரும் ரச்சிதா மற்றும் ராபர்ட்  என கூறிய நிலையில் இருவரும் ஜோடியாக பிக்பாஸ் வீட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளனர்.

இந்த விடயம் நடக்கும் முன்னே ரச்சிதா தன்னிடம் நிறைய விசயங்களை மறைத்து விட்டதாக எண்ணி ரச்சிதாவிடம் பேசாமல் அழுத ராபர்ட் ஜெயிலுக்கு போய் பேசுவாரா என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்கள் பலரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.

இதோ அந்த வீடியோ...








Advertisement

Advertisement