• Jul 25 2025

சீரியல் நடிகை நீலிமா ராணிக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகள் இருக்கின்றனரா?-அசர வைக்கும் போட்டோஸ்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஆகியவற்றில் நடித்து பிரபல்யமானவர் தான் நீலிமா ராணி.இவர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான 'தேவர் மகன்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து தம், நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம், போன்ற படங்களில் முக்கிய குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கின்றார்.


இதனைத் தொடர்ந்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற இவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நீலிமா இசைக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.குழந்தைக்காக சீரியலை விட்டு விலகிய இவர் தற்போது தன்னுடைய குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகிறார். 


அவ்வபோது தன்னுடைய குழந்தைகளுடன் புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.தற்போது  நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளுடன் பீச், கோவில், போன்ற வெளியிடங்களுக்கு குடும்பத்தோடு செல்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.


எனினும் விரைவில் இவர் ஏதேனும் சீரியலில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தின் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement