• Jul 26 2025

ஹோம்லி பெண்ணாக மாறிய ஹன்சிகா- தனது மாமியார் வீட்டில் என்ன செய்கிறார் என்று பாருங்க?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் பிரபல்யமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஹன்சிகா. இவரது நடிப்பில் இறுதியாக மஹா என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இது இவருடைய 50வது படமாகும். இதற்கு பின்னரும் சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

அந்த நிலையில் டிசம்பர் 4ம் திகதி சொஹைல் கத்துரியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணமும் பிரமாண்டமாக நடைபெற்றது.


ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

ஹன்சிகா தற்போது அவரது கணவருடன் மாமியார் வீட்டில் தான் இருக்கிறார். அவர் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தற்போது சமைத்து கொடுத்தாராம்.ஹன்சிகா தன் கையால் அல்வா செய்து எல்லோருக்கும் கொடுத்து இருக்கிறார். அந்த போட்டோவை அவரது கணவரே பகிர்ந்து இருக்கிறார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement