• Jul 25 2025

அதெல்லாம் வதந்தி நம்பாதீங்க- லியோ படப்பிடிப்பிலிருந்து வெளியாகிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யின் 'லியோ' படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காஷ்மீரில் நடக்கும் இந்த ஷுட்டிங்கிற்காக படக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் உள்ளனர்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் காஷ்மீரில் பனிகளுக்கு நடுவில் ஜெர்கின் அணிந்தபடி நடந்து வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார் த்ரிஷா.இவரின்  இந்த கியூட்டான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.


 இப்படியொரு நிலையில் காஷ்மீரில் ஏற்பட்ட கடும் குளிர் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் விரைவில் படக்குழு சென்னைக்கு திரும்பவுள்ளதாகவும் சில நாட்களுக்கு முதல் தகவல் வெளியாகியிருந்தது.


ஆனால் படக்குழு சென்னை திரும்பவுள்ளதாக கூறப்பட்ட விடயம் உண்மை இல்லையாம். காஷ்மீரில் கடும் குளிர் என்பது உண்மை தானாம். அதற்காக படக்குழுவினர் மதியத்திற்கு பிறகு தான் ஷுட்டிங் நடத்தி வருகின்றார்களாம். மேலும் ஷுட்டிங் முழுவதும் முடிந்த பிறகு தான் அவர்கள் சென்னை திரும்பவுள்ளதாகவும் தற்பொழுது சரியான தகவல் வெளியாகியுள்ளது.இதனால் தளபதி ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.







Advertisement

Advertisement