• Jul 24 2025

பாக்கியலட்சுமி சீரியல் எழிலுடன் ஏற்பட்ட காதல் முறிவு- சீரியலை தூக்கி எறிந்தார் ‘ராஜாராணி’ ரியா!

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவி தொலைக்காட்சியில், கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'ராஜா ராணி 2'. இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கி வரும் இந்த சீரியல், ஒரு பெண்,விடா முயற்சி, மற்றும் தடைகளை தாண்டி எப்படி தன்னுடைய இலட்சியத்தை அடைகிறாள் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சீரியலில் முதலில் ஹீரோயினாக நடித்து வந்தவர் ஆல்யா மானசா தான் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாகியதால் சீரியலில் இருந்து விலகினார்.இதனை அடுத்து கடந்த ஒரு வருட காலமாக ரியா என்பவர் நடித்து வந்தார். இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முதல் ரியா இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக அவரே அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தார்.


இந்த நிலையில் தற்பொழுது ஆஷா கவுடா என்பவர் இந்த சீரியலில் நடித்து வருகின்றார். இருப்பினும் ரியா ஏன் சீரியலை விட்டு விலகினார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரியாவுக்கு ராஜா ராணி சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்ததே பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் விஜே விஷால் தானாம்.

இப்போது விஷாலுக்கும் ரியாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு விட்டதாம். இதனால் அவர் வாங்கிக் கொடுத்த சீரியல் எல்லாம் வேண்டாம் என்று ரியா விலகி விட்டதாக கூறப்படுகின்றது. இருப்பினும் இது குறித்த எந்த சரியான விளக்கமும் இருதரப்பினரிடம் இருந்தும் வெளியாகவில்லை.மேலும் ஏற்கனவே விஜே விஷாலும் ரியாவும் காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது.


ஆனால் இருவரும் தமது காதலை உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் தற்பொழுது ரியா சீரியலை விட்டு வெளியேறியதற்கு விஜே விஷால் காரணமாக இருக்க முடியாது என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement