• Jul 26 2025

நின்று கொண்டு அதைச் செய்யாதீர்கள்... இந்தப் பிரச்சினை எல்லாம் வரும்.. முக்கிய கருத்தை பகிர்ந்த ஆலியா பட்டின் பிட்னஸ் டிரைனர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களான கரீனா கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோரின் யோகா பயிற்சியாளரான அனுஷ்கா பர்வானி என்பவர் தண்ணீரை குடிப்பதற்காக சரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டு அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். 

அந்தவகையில் அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது "தண்ணீர் குடிக்க சரியான வழி இருக்கிறதா என்று கேட்டால் ஆம், இருக்கிறது என்று தான் சொல்வேன். ஏனெனில் உடலில் நீரின் அளவு குறையாமல் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. ஆனால், அதற்குச் சரியான வழியும் இருக்கிறது.


நின்று கொண்டே தண்ணீர் குடித்தால் நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறு போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கும்" எனக் அனுஷ்கா பர்வானி குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி நின்றுகொண்டே தண்ணீர் குடித்தால் அது மூட்டுவலியை ஏற்படுத்தக்கூடும் என்றும் உடலில் பயணிக்கும் நீரின் வேகம் அதிகரிக்கும் போது அது நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் நேராக நிமிர்ந்து உட்கார்ந்தபடி தண்ணீர் குடிப்பது தான் சரியான வழி என்றும் அவர் அதில் கூறி உள்ளார். மேலும் இவ்வாறு செய்வதனால் மூளையின் செயல்பாடு மேம்படும் என்றும் இது செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அதேபோல் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் அவர் அப்பதிவில் பகிர்ந்துள்ளார். அதாவது செம்பில் உள்ள குளிர்ச்சியான பண்புகள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுவதாகவும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு அதிக அளவு தண்ணீர் குடிப்பதைவிட, சரியான முறையில் தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று அனுஷ்கா பர்வானி தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement