• Jul 25 2025

துணிவு சில்லா சில்லா பாட்டு எப்படி இருக்கு? லோகேஷ் கூறிய பதில்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

துணிவு படத்தின் முதல் சிங்கிள் சில்லா சில்லா பாடல் குறித்து லோகேஷ் கனகராஜ்  கூறிய பதில் தற்போது வைரலாகி வருகின்றது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின்னர்   நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.மேலும் இந்த படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

மேலும் இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அத்தோடு  பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகின்றார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்அத்தோடு அதுணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அத்தோடு  ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சில்லா சில்லா மூன்று நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 1.3 மில்லியன் லைக்குகளுடன் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

இந்த பாடல் லிரிக் வீடியோவில் நடிகர் அஜித் குமாருடன் நடிகை மஞ்சு வாரியர், சிபி சந்திரன், பாவனி, ஆமிர் ஆகியோர் தோன்றியுள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில் லத்தி படத்தின் விழாவுக்கு வந்திருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம்  துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. "துணிவு பாட்டு கேட்டீங்களா? தலயோட பாட்டு எப்படி இருந்தது? " என்ற கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், "ரொம்ப சூப்பரா இருந்தது,  ரொம்ப பிடிச்சிருந்தது" என பதில் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement