• Jul 25 2025

இந்த மாதிரிக் கேவலமான வேலையைப் பண்ணாதீங்க... 'பைரவா' பட நடிகையின் பெயரில் நடந்த மோசடி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை அம்மு அபிராமி. இவர் விஜய்யின் 'பைரவா' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து 'தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன்' போன்ற பல படங்களில் நடித்திருக்கின்றார்.


எது எவ்வாறாயினும் வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' என்ற படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தான் மக்கள் மத்தியில் அதிகளவில் பேமஸ் ஆனார். இதையடுத்தும் பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அம்மு அபிராமியை மக்கள் மத்தியில் மென் மேலும் பிரபலமாக்கியது 'குக் வித் கோமாளி' என்ற நகைச்சுவை நிகழ்ச்சி தான். 

இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்துகொண்ட அம்மு அபிராமி இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தினார். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு பல படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகளும் வந்து குவியத் தொடங்கின.


இந்நிலையில் இவர் தற்போது தன் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் நடந்த நூதன மோசடி பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது அம்மு அபிராமி யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தான் சுற்றுலா சென்ற வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு வந்துள்ளார். 

இதனைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் அவரது யூடியூப் சேனல் லோகோவை அப்படியே காப்பி அடித்து போலியாக அவரைப் போலவே ஒரு சேனலை தொடங்கி உள்ளார். அது அம்மு அபிராமியின் உண்மையான சேனல் என நினைத்து ஏராளமானோர் அந்த நபரின் சேனலை பின் தொடர்ந்தும் வந்துள்ளனர். 

இவ்வாறாக அந்த சேனலை பின் தொடர்ந்த ரசிகர் ஒருவரிடம் "தங்களுக்கு ஐபோன் ஒன்று பரிசு கிடைத்துள்ளதாகவும், அதனை உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு டெலிவரி சார்ஜாக ரூ.5000 நீங்கள் செலுத்த வேண்டும்" என்றும் கூறியுள்ளார். இதை உண்மை என நினைத்து அந்த ரசிகரும் பணத்தை அந்த அக்கவுண்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஒரு சில நாட்களின் பின்னர் தான் அவர் மோசடியில் சிக்கி உள்ளமை தெரியவந்துள்ளது. பின்னர் நடிகை அம்மு அபிராமியிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார் அந்த ரசிகர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அம்மு அபிராமி இந்த நூதன மோசடியை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக சில ஸ்கிரீன்ஷாட்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.


அதுமட்டுமல்லாது தயவு செய்து இதுபோல் யாரும் ஏமாந்து விட வேண்டாம் என தனது ரசிகர்களை அலெர்ட் செய்தும் வருகின்றார். இவ்வாறு ஒரு நடிகை பெயரில் நடந்த இந்த நூதன மோசடி கோலிவுட் வட்டாரத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement