• Jul 23 2025

விஜய்க்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை..பல நாள் கழித்து கூறிய உண்மை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் உதயநிதி. இவர் தற்பொழுது கலகத் தலைவன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

நடிப்பைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார்.நடிகராக மட்டுமல்லாமல் விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். 

இவ்வாறுஇருக்கையில் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பல சுவாரஸ்யமான விஷயங்களை அதில் பகிர்ந்து கொண்டார்.


அப்போது விஜய்க்கும் தனக்கும் Misunderstanding ஆகிவிட்டது என்று சொன்னார். இது குறித்து விரிவாக கூறமுடியுமா என்று அவரிடம் கேள்வி எழுந்தது.

அதை பற்றி பேசிய உதயநிதி, " நாங்கள் இருவரும் நெருக்கமான நண்பர்களாக தான் இருந்தோம். ஆனால், இடையில் இருவருக்குள்ளும் Misunderstanding ஆகிவிட்டது. என்னை பற்றி அவரிடம் தவறாகவும், அவரை பற்றி எண்னிடம் தவறாகவும் சில நபர்கள்  சொன்னார்கள்.


அதனால் இருவருக்குள்ளும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அதன்பின் தான் ஒரு நாள் அவரை சந்தித்து, இதுதான் நடந்தது என்று தெளிவாக கூறிவிட்டேன். அதன்பின் இருவரும் சுமுகமாக பழக துவங்கிட்டோம் " என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement