• Jul 26 2025

'என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள், உங்களால் சமாளிக்க முடியாது' - முதமைச்சருக்கு டுவிட் செய்த பிக் பாஸ் பாலாஜி!!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பிக் பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் பாலாஜி முருகதாஸ். அவர் அந்த சீசனின் இரண்டாம் இடத்தை பிடித்தார். அடுத்து அவர் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்தார்.

பிக் பாஸ் மூலமாக கிடைத்த புகழை வைத்து அவருக்கு ஹீரோ வாய்ப்பும் தேடி வந்தது. அவர் தயாரிப்பாளர் ரவீந்தர் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவிப்பு வந்தது. ஆனால் அந்த படம் என்ன ஆனது என எந்த அப்டேட்டும் வரவில்லை.இந்நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸ் ட்விட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என முதலமைச்சரை கேட்டிருக்கும் அவர், மது கடைகளால் தன்னை போன்ற ஆதரவற்றவர்கள் உருவாகிறார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.'என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள், உங்களால் சமாளிக்க முடியாது' வேண்டும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த ட்விட் வைரல் ஆன நிலையில் பாலாஜி முருகதாஸ் பீரில் குளிக்கும் பழைய புகைப்படத்தை நெட்டிசன்கள் கமெண்டில் பதிவிட்டு வருகிறார்கள்.  




Advertisement

Advertisement