• Jul 23 2025

சும்மா அதைப் பற்றியே கேட்டிட்டு இருக்காதீங்க- தொகுப்பாளியினியிடம் டென்ஷனான ஜூனியர் என்.டி.ஆர்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான ஆர்.ஆர்.ஆர் படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என். டி.ஆரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.


இந்நிலையில், ராஜேந்திர ரெட்டி இயக்கத்தில் ராம் நந்தமூரியின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'அமிகோஸ்'. இப்படம் பிப்ரவரி 10ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், இப்பட விழாவில் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொண்டார். அப்போது, தொகுப்பாளினி சுமா, ஜூனியர் என்.டி.ஆர் இப்போது உங்களிடம் சில வார்த்தைகள் பேசுவார். அவர், தனது 30வது படம் குறித்து என்ன சொல்லப்போகிறார் என்று கேட்கலாம் என்றார்.

இதையடுத்து, தொகுப்பாளினியிடம் இருந்து கோவமாக மைக்கை வாங்கிய ஜூனியர் என்.டி.ஆர், அவர்கள் அப்டேட் கேட்கவில்லை என்றாலும், நீங்களே கேட்கவைத்து விடுவீர்கள் என்று கோவத்துடன் கூறினார். இதையடுத்து, ஜூனியர் என்.டி.ஆர் பேசத் தொடங்கினார். அப்போது தொடர்ந்து கைதட்டியும் விசில் அடித்துக்கொண்டு இருந்ததால், தயவு செய்து அமைதியாக இருங்கள், எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. இருந்தாலும் ரசிகர்களை பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த விழாவிற்கு வந்திருக்கிறேன் . ராம் நந்தமூரியின் நடித்திருக்கும் அமிகோஸ் படம் பிப்ரவரி 10ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. அனைவரும் கட்டாயம் படத்தை பாருங்கள் என்றார்.


இதைத்தொடர்ந்து பேசிய ஜூனியர் என்.டி.ஆர், உங்கள் அனைவரிடம் ஒரு முக்கிய கோரிக்கை வைக்கிறேன். தயவு செய்து படம் குறித்த அப்டேட்டை கேட்காதீர்கள், தினமும் படம் குறித்த அப்டேட்டை பகிர்ந்து கொண்டே இருக்க முடியாது. ரசிகர்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பதால், தயாரிப்பாளருக்கும், இயக்குநர்களுக்கும் ஏதாவது அப்டேட்டை கொடுத்தே ஆகவேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.


இதனால், அப்டேட்டுக்கு மதிப்பே இல்லாமல் போய்விடுகிறது. படம் குறித்து ஏதாவது அப்டேட் இருந்தால், மனைவி குடும்ப உறுப்பினர்களுக்குக்கூட சொல்லாமல், ரசிகர்களாகிய உங்களுடன் தான் பகிர்ந்து கொள்வோம். நீங்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை புரிந்துகொண்டதால் தான் இதனை செய்கிறோம் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்று ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை வைத்தார்.


Advertisement

Advertisement