• Jul 24 2025

இது தான் ட்ரெண்டிங்கா?- ஆர்.ஜே.பாலாஜி, ஜிவி.பிரகாஷ் அணிந்துள்ள ரிசேர்ட்டின் விலை எவ்வளவு தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்கள் போட்டோ ஷுட் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் அவர்கள் பொது நிகழ்ச்சிகளிலும் சரி போட்டோ ஷுட்களிலும் சரி அணிந்து வரும் ஆடைகள் ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வருகின்றது.

பிரபலங்களிடம் எந்த விஷயம் பிரபலமாகிறதோ இல்லையோ அவர்கள் அணியும் உடைகள் மட்டும் மக்களிடம் செம வைரலாகிறது.அப்படி கடந்த சில வருடங்களாகவே பிரபலங்கள் அணியும் பிரான்ட் சர்ட்டுகள் அதிகம் ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது. Balmain பிராண்ட் சர்ட்டுகளை பிரபலங்கள் அதிக அணிய ரசிகர்களும அதிக வாங்க செய்தார்கள்.


தற்போது இரண்டு பிரபலங்கள் அணிந்திருக்கும் ஒரே சர்டின் விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.ஆர்.ஜே.பாலாஜி தான் நடித்துள்ள ரன் பேபி ரன் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொண்டார்.அப்போது ஒரு கருப்பு நிறு சர்ட்டை அணிந்திருந்தார்.

அதேபோல் ஜி.வி. பிரகாஷ் அண்மையில் நடந்த வாத்தி ஆடியோ வெளியீட்டு விழாவில் பாலாஜி அணிந்த சர்ட் போன்றே ஜி.வியும் அணிய இப்போது ரசிகர்களால் என்ன பிராண்ட் சர்ட் என பார்க்கப்படுகிறது.


அது லூயிஸ் வியூட்டன் என்கிற பிராண்ட் எனவும் அதன் விலை ரூ.1 லட்சம் என்பதையும் கண்டுபிடித்து வைரலாக்கி வருகின்றனர்.அத்தோடு இது தான் ட்ரெண்டிங் ரிசேர்ட் என ரசிகர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement