• Jul 25 2025

''இதையாவது தொலைக்காம வைச்சிருங்க''... ஷாலு ஷம்மு புதுசா என்ன வேண்டியிருக்காங்க பாருங்க.....வைரல் வீடியோ...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஏப்ரல் 9ம் தேதி இரவு பார்ட்டிக்கு சென்ற இடத்தில் நடிகை ஷாலு ஷம்முவின் ஐபோன் காணாமல் போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பார்ட்டியில் தன்னுடன் கலந்து கொண்ட நண்பர்களில் ஒருவர் தான் அதனை திருடியிருக்க வேண்டும் என பரபரப்பு புகார் கொடுத்து இருந்தார் ஷாலு ஷம்மு.

இந்நிலையில், தற்போது புதிதாக காலிங் ஆப்ஷன் உடன் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை வாங்கிய அவர் அதனை அன்பாக்ஸிங் செய்யும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கர், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகையாக நடித்து வந்த ஷாலு ஷம்மு அதன் பிறகு கவர்ச்சி நடிகையாக தனது ரூட்டை மாற்றிக் கொண்டார். 

 இன்ஸ்டாகிராமில் படு கிளாமராக போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வரும் ஷாலு ஷம்மு இரண்டாம் குத்து படத்தில் ஐட்டமாகவே நடித்து இருப்பார். பவுடர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஷாலு ஷம்மு வொர்க்கவுட் வீடியோக்களையும் கவர்ச்சி போட்டோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

பல ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வந்தாலும் நடிகை ஷாலு ஷம்முவுக்கு இன்னமும் ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் கூட வரவில்லை.

9 லட்சத்திற்கு நெருக்கமாக ஃபாலோயர்களை கொண்டுள்ள இவர் விரைவில் 1 மில்லியன் ஃபாலோயர்களை சேர்க்க ஏகப்பட்ட போட்டோஷூட்களையும் ரீல் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.திருடு போன ஐபோன்: கடந்த ஏப்ரல் 9ம் தேதி நண்பர்களுடன் எம்.ஆர்.சி நகரில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் இரவு பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். அதன் பின்னர் தனது தோழியுடன் சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் தங்கி உள்ளார். காலை எழுந்த பார்த்த நிலையில், தனது செல்போன் மிஸ் ஆனதை அறிந்து ஷாக்கான ஷாலு ஷம்மு இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.

சுமார் 2 லட்சம் மதிப்புடைய காஸ்ட்லி ஐபோன் திருடு போன நிலையில், தனது நண்பர்கள் தான் திருடியிருப்பார்கள் என போலீஸில் ஷாலு ஷம்மு புகார் அளித்த நிலையில், நண்பர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 ஐபோன் காணாமல் போன நிலையில், போன் காலிங் வசதியுடன் புதிதாக Fossil 8th Generation ஸ்மார்ட் வாட்ச்சை வாங்கி உள்ளார். அந்த வாட்ச்சை அன்பாக்ஸிங் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, மிகவும் குறைவான விலைக்கு இந்த வாட்ச்சை வாங்கி உள்ளேன் எனக் கூறியுள்ளார்.

ஷாலு ஷம்மு வாங்கி உள்ள அந்த ஸ்மார்ட் வாட்ச்சின் விலை 4,899 முதல் கிடைக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாட்ச்சையாவது தொலைக்காமல் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்க ஷாலு அக்கா என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். எனக்கு எதுவும் கிஃப்ட் பண்ண மாட்டீங்களா? என்றும் இனிமே கம்மியான விலைக்குத் தான் ஷாலு ஷம்மு பொருட்களை வாங்குவார் என்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement