• Jul 25 2025

பலகோடி சம்பளம் வாங்கும் உங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட கஸ்டமா? - கண்டபாட்டுக்கு பொய் சொல்லக்கூடாது; தனுஷை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் தற்போது நடித்திருக்கும் திரைப்படம் 'வாத்தி'. இப்படமானது நாளை ரிலீஸாகவிருக்கிறது. மேலும் தமிழில் 'வாத்தி' என்ற பெயரில் வெளியாகும் இந்த திரைப்படம் தெலுங்கில் 'சார்' என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. 


இந்நிலையில் நடந்து முடிந்த 'வாத்தி' இசை வெளியீட்டு விழாவில் பண விஷயம் குறித்து தனுஷ் பேசிய ஒரு விஷயமானது சர்ச்சையாக மாறி இருக்கின்றது. அதாவது அதில் அவர் கூறுகையில் "அப்பா, அம்மா பீஸ் கட்டிவிடுவார்கள் என்று ஜாலியாக சுற்றித் திரிந்தேன். தற்போது என் மகன்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டும்போது தான் அந்த கஷ்டம் எனக்கு புரிகிறது" எனத் தெரிவித்திருந்தார்.


இந்த விடயத்தைப் பற்றித்தான் தற்போது சமூக வலைதளங்களில் பலரும் பேசி வருகிறார்கள். அதாவது "பல கோடி சம்பளம் வாங்கும் உங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுவது பிரச்சனையே இல்லை" என்கிறார்கள் நெட்டிசன்கள்.


மேலும் "அப்படியே உங்களிடம் ஒருவேளை பணம் இல்லாவிட்டாலும் தாத்தா ரஜினிகாந்த் தன் பேரன்களுக்காக ஃபீஸ் கட்டிவிடுவார். அவரிடம் இல்லாத பணமா?. ரஜினி மகளை திருமணம் செய்துவிட்டு பண பிரச்சனை பற்றி நீங்கள் பேசுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க, இப்படி எல்லாம் கண்டபாட்டுக்கு பொய் சொல்லக் கூடாது" எனக் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement