• Jul 26 2025

“எப்பவும் அவங்க மேல அன்பு இருக்கும்” - சுசித்திராவின் முன்னாள் கணவரின் உணர்சிபூர்வ வார்த்தைகள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஆர்ஜே, டிவி தொகுப்பாளினி, நடிகை, பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. தனது திறமையால் சினிமா வட்டாரத்தில் பெரும் நட்பு வட்டாரத்தை கொண்டிருந்தார் சுசித்ரா.பாடகி சுசித்ரா நடிகர் கார்த்திக்குமாரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் கார்த்திக்குமார் யாரடி நீ மோகினி, பொய் சொல்ல போறோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோக்கள், போட்டோக்கள் சுச்சி லீக்ஸ் என்ற தலைப்பில் வெளியானது. பல நடிகைகளின் பிரைவேட் போட்டோக்களும் சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியானது.

இதனால்  அவரது திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது.கடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் என்டரியாக பங்கேற்றார்.இதில் சக போட்டியாளரான பாலாஜிக்கு ஆதரவாக இருந்து வந்தார். இதன் காரணமாக சொற்ப நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் சுசித்ரா. இந்நிலையில் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரான நடிகர் கார்த்திக் குமார் மேயாத மான்', 'தேவ்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இளம் நடிகை அமிர்தா ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது சுசித்ரா மீது இன்னும் அன்பு இருக்கா என்ற கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு கார்த்திக் குமார்,பதில் கூறுகையில் , .ரொம்ப கஷ்டங்களை கடந்து அவங்கட கேரியர கொண்டு போறாங்க..இப்போ வரைக்கும் நான் அவங்ககிட்ட பார்க்கிற விஷயம் என்னவெனில் மிகவும் தைரியமானவங்க. 15 வருடங்கள் அவங்களோட பயணித்திருக்கிறேன்.அவர் எப்பவும் எனக்கு சிறந்த நபர்.எப்பவுமே அவங்க மேல அன்பு இருக்கும்.

உங்கள் வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலைகள் வந்து கொண்டே தான் இருக்கும் அதை ஒரு தைரியத்தோட போராட  வேண்டியது உங்களுடைய பொறுப்பு,அதே சமயத்தில் உங்கள்  தைரியத்துல உங்க கஷ்டங்களும் இருக்கு அதனை வலியில்லாமல் காட்டுவதில் இல்லை தைரியம் அதனை கடந்து வெளிப்படுத்துவது தான் தைரியம்.' என தெரிவித்தார்.

Advertisement

Advertisement