• Jul 25 2025

தேவையில்லாதது எல்லாம் சொல்லாதீங்க எதுவும் உண்மையில்லை- வதந்திக்கு புகைப்படத்துடன் முற்றுப்புள்ளி வைத்த அருண் விஜய்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் இருந்து கதாநாயகனாக, வில்லனாக மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் விஜயகுமார்.இவர் தற்பொழுதும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவருடைய உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை விஜயகுமாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "எனது தந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். 


தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்" என  பதிவிட்டுள்ளார்.அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் 'யானை' & 'சினம்' ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதேபோல் சோனி லிவ் தளத்தில் தமிழ் ராக்கர்ஸ் சீரிஸூம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது அருண் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குநர் A.L விஜய் உடன் இணைந்துள்ளார்.இந்த புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் நடைபெற்றது . ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement