• Jul 24 2025

தனது தந்தையிடம் பாக்கியா பற்றி புலம்பும் கோபி- எழிலுக்கு எதிராக ஈஸ்வரி போட்ட அடுத்த திட்டம்-பாக்கியலட்சுமி எப்பிஷோட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு வீட்டுக்கு வந்து பாக்யாவிடம் மொத்த விஷயத்தையும் எழில் சொல்ல பாக்கியா அமிர்தாவுக்கு போன் போட போன் ஸ்விட்ச் ஆப் என வருகிறது. அதன் பிறகு எழில் எனக்காக அமிர்தா வீட்டுல வந்து பேசுவியா என கேட்க பாக்யா சரி நான் வந்து பேசுறேன் என சொல்லி சமாதானம் செய்கிறார்.

அடுத்ததாக வீட்டுக்கு வரும் கோபி அப்பாவிடம் பாக்கியாவை வெளியில் பார்த்தேன். யார் கூடயோ உக்காந்து சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தா இதெல்லாம் என்ன புது பழக்கம் என கேட்க கோபியின் அப்பா என் மருமகள சந்தேகப்படறியா என சத்தம் போடுகிறார். நான் அப்படியெல்லாம் சொல்லல இது என்ன புது பழக்கம் என்று தான் கேட்டேன் அவளை விட்டுட்டு வந்து ராதிகா கூட உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு அப்புறம் அவளை பத்தி உனக்கு என்ன கவலை என கேட்க எனக்கு என்ன கவலையா அவ என் வீட்டுல தான் இருக்கா. என்னம்மா அம்மா குழந்தைங்க எல்லாரும் அந்த வீட்ல தான் இருக்காங்க தான் என சொல்ல தாத்தா பதிலடி கொடுக்கிறார்.


அதன் பிறகு கோபி என்னமோ போங்க என திரும்ப ராதிகா கோபமாக நிற்கிறார். அதன் பிறகு வர்ஷினி தன்னுடைய அப்பாவிடம் எழில் மீது காதல் இருக்கும் விஷயத்தை சொல்ல அவர் அவங்க வீட்ல இருக்காங்க வந்து பேச சொல்லி அப்புறம் முடிவெடுக்கிறேன் என்று சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து கோபியின் அப்பா ராதிகா வீட்டில் கொடி கட்டி துணி காய போட ராதிகாவும் கோபியும் என்ன இது வீட்டுக்குள்ள துணி காய போட்டுக்கிட்டு இருக்கீங்க என்ன கேட்க வெளியில் மழை பெய்யுது என சொல்லி வெறுப்பேத்துகிறார்.


பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் என்ன கொடுமை படுத்துறாங்கன்னு கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என மிரட்டுகிறார். ராதிகா இதெல்லாம் நல்லாவே இல்லை என சொல்ல நான் ஒன்னும் யாருடைய ஆடரையும் கேன்சல் செய்யல என வெறுப்பேத்த அவர் கோபித்துக் கொண்டு உள்ளே செல்கிறார்.அதன் பிறகு பாக்கியாவும் எழிலும் அமிர்தா வீட்டிற்கு செல்வதற்காக ரெடியாக ஈஸ்வரி மற்றும் செழியன் வர்ஷினி வீட்டுக்கு சென்று கல்யாணம் பற்றி பேச தயாராகின்றனர். இத்துடன் இன்றைய  எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement