• Jul 25 2025

உங்க அரசியல் புத்தியை என் கிட்ட காட்டாதீங்க-போனில் மிரட்டினா பயப்பட மாட்டேன்- கடும் கோபத்தில் வனிதா

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரை எந்தவொரு சத்தமும் காட்டாமல் சைலன்ட்டாக சென்று கொண்டிருந்த நிலையில், ஃபினாலே வாரத்தில் மிகப்பெரிய அளவுக்கு சோஷியல் மீடியாவில் பேசு பொருளாக மாறி உள்ளது.அத்தோடு யார் ஜெயிக்கப் போகின்றார்கள் என்பதனைக் காண பார்வையாளர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

இதுவரை மக்கள் ஆதரவு பெற்று வந்த பிக் பாஸ் போட்டியாளர் விக்ரமனுக்கு இறுதி நேரத்தில் அரசியல் கட்சியின் நேரடி ஆதரவு கிடைத்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. வனிதா விஜயகுமார், பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்டோர் அரசியல் கட்சியின் தலைவரான திருமாவளவன் எப்படி விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்கலாம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.


திருமாவளவன் செய்தது நியாயமில்லை என நேரடியாக டுவிட் போட்டு விளாசிய வனிதா விஜயகுமாருக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் மிரட்டல்கள் வருவதாக கூறியுள்ளார். அவர் விமர்சனம் சொல்லி வரும் யூடியூப் சேனலுக்கு போன் போட்டு மிரட்டி உள்ளனர் என்றும் அதற்கெல்லாம் தான் பயப்பட மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

யாருக்கும் எதுக்கும் பயந்தவ நானில்லை.. உங்க அரசியல் புத்தி என்னன்னு காலம் காலமா பார்த்திருக்கோம்.. நேர்மையா மக்களுக்கு நல்லது பண்ணி முன்னேற பாருங்க.. உங்க அரசியல் எல்லாம் எங்கிட்ட வச்சிக்காதீங்க என விளாசி உள்ளார் வனிதா விஜயகுமார்.


ஒரு பிக் பாஸ் ஜெயிக்கிறதுக்கே அராஜகம்னா.. எலக்‌ஷன் வந்தா என்னன்ன செய்வாங்க.. இவங்கள மாதிரி அரசியல் கட்சிகள்.. அரசியல் எங்கே பண்ணனுமோ அங்கே பண்ணுங்க, நான் டிஸ்டர்ப் பண்ணல.. அதே போல எங்க என்டர்டெயின்மென்ட்ல வந்து நீங்க அரசியல் பண்ணாதீங்க என விளாசி உள்ளார்.

வனிதா விஜயகுமார் தன்னை ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மிரட்டுகின்றனர் என சொல்லி உள்ள நிலையில், அவருக்கு ஆதரவாகவும் அதே சமயம் விக்ரமன் வெற்றி பெறக் கூடாது என வனிதா வரிந்து கட்டிக் கொண்டு பேசுகிறார் என அவருக்கு எதிராகவும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.



Advertisement

Advertisement