• Jul 25 2025

''எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்''...அதிதி ராவ் வேண்டுகோள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை அதிதி ராவ் மற்றும் சித்தார்த்தும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வருவதால், அதிதி ராவ் ஹைதாரி சமீபகாலமாக காதல் திருமண செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். சமீபத்தில் கூட, இருவரும் ஒன்றாக ‘டும் டும்’ பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோவைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது மட்டும் இல்லாமல், இது அவர்களது திருமணம் குறித்த ஊகங்களை மறைமுகமாக உறுதிப்படுத்துவது போல் இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு  வந்தன.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிதி பேசுகையில், தனது வேலையில் ஆர்வமாக இருப்பதாகவும், படங்களில் நடிப்பதில் விரும்புவதாகவும், தனது வாழ்க்கையில் கவனம் செலுத்துவதாகவும் கூறினார். மக்கள் தன்னை ஏற்றுக்கொண்டு தனது திரைப்படங்களைப் பார்க்கும் வரை, அதுவே தனக்கு போதுமானது என்றும் கூறினார்.

நடிகை அதிதி ராவ், மறைமுகமாக தனது ரசிகர்களிடம் தனிப்பட்ட வாழ்க்கையை விட, தனது சினிமா வாழ்க்கையில் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்து, தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்க்கொண்டார்.




Advertisement

Advertisement