• Jul 25 2025

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சூப்பர் சிங்கர் பிரகதி.. குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியைப் பொறுத்தவரையில் சாதிக்கத் துடிக்கும் பலருக்கு ஒரு சாதனை மேடையாக அமைந்திருக்கின்றது. இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மட்டுமன்றி அதில் பங்குபற்றும் நபர்களும் எளிதில் மக்கள் மத்தியில் பிரபல்யமாகி விடுவார்கள்.

அவ்வாறு சாதாரண மனிதனை பிரபலமாக மாற்றுகின்ற ஒரு சக்தி வாய்ந்த நிகழ்ச்சி தான் 'சூப்பர் சிங்கர்'. இந்த நிகழ்ச்சியானது எத்தனையோ பேருக்கு சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.


இவர்கள் திரைப்படங்களில் பாடுவது மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்கள் நடத்தும் கச்சேரிகளிலும் அதிகம் பங்கேற்று வருகின்றனர். அவ்வாறு சூப்பர் சிங்கரில் சிறுவர்களுக்கான சீசனில் பாடி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் தான் பிரகதி குருபிரசாத்.


இவர் எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருந்துவருவார். அதில் அடிக்கடி புகைப்படங்கள் பதிவிடும் பிரகதி தற்போது ஒரு புதிய காரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் புதிய காரின் முன் பிரகதி புகைப்படம் எடுத்து போட்டு "நான் வாங்கிய பெரிய முதல் பொருள், நிறைய கூற வேண்டும் ஆனால் தற்போது எமோஷ்னலாக உள்ளது" என உணர்ச்சிகரமாக பதிவு ஒன்றினைப் போட்டுள்ளார்.


அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருரின் முயற்சிக்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.

Advertisement

Advertisement