• Jul 25 2025

வீண் வதந்திகளை பரப்பாதீர்கள்... தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி அறிவிப்பு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சமீபத்தில் இடம்பெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒப்புதல் பெற்றனர். அதில் முக்கிய அம்சமாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டும் கால்ஷீட் வழங்காத நடிகர்கள், தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்திய நடிகர்கள் என பல தரப்பில் பட்டியல் எடுத்து, அந்த நடிகர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை (Red Card) என முடிவெடுத்திருந்தனர்.


இதனையடுத்து சில நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியுள்ளது என்று தகவல் வெளியான நிலையில் அது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தயாரிப்பாளர்களுடன் உள்ள பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கம், சீர்குலைக்கும் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அந்த அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement