• Jul 26 2025

காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட வானத்தைப்போல ராஜபாண்டி! குவியும் வாழ்த்துக்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் வானத்தைப்போல. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்த தொடரின் கதைக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதற்கு நல்ல டிஆர்பி ரேட்டிங்கும் கிடைத்து வருகிறது. முக்கிய ரோல்களில் ஸ்ரீகுமார், மான்யா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சீரியலில் ராஜபாண்டி ரோலில் அஷ்வின் கார்த்தி நடித்து வருகிறார். தொடக்கத்தில் நெகடிவ் ரோல் போல காட்டப்பட்டாலும் அதன்பின் பாசிட்டிவாக அந்த ரோல் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஷ்வின் கார்த்தி தற்போது அவரது காதலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றும் காயத்ரி ஞானசேகரன் என்பவர் தான் அவரது காதலி.

ஜோடிக்கு தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement