• Jul 26 2025

எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதே செருப்பால் அடிப்பேன்- ரசிகரை மோசமாக திட்டிய புஷ்பா பட நாயகி- அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தெலுங்கு சினிமாவில் பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் அனசுயா பரத்வாஜ்.இவர்  தமிழ் - தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் தனது கணவரோடு இருக்கும் படத்தைப் பகிர்ந்து, அவரோடு சந்தோஷமாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.அதற்கு நெட்டிசன் ஒருவர், அவரிடம் நிறைய பணம் இருக்கிறது, அதுதான் மகிழ்ச்சிக்கு காரணம் எனத் தெரிவித்திருந்தார்.


அதற்கு, “என்னடா தம்பி அப்படி சொல்லிவிட்டாய். அவரிடம் எவ்வளவு இருக்கிறது? என்னிடம் பணம் இல்லையா? கன்னத்தில் போட்டுக்கொள், இல்லையென்றால் செருப்பால் உன் கன்னத்தில் அடிப்பேன்” எனத் தெரிவித்திருக்கிறார் அனசுயா.


அதற்கு அந்த நெட்டிசன், உண்மையை புரிந்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு சொன்னாலும் உண்மை உண்மை தான் என்று தெரிவித்திருந்தார்.அதற்கு பதிலளித்த அனசுயா, “எல்லாம் தெரிந்த மாதிரி பேசாதே. மஞ்சள் காமலை வந்தவனுக்கு உலகம் முழுவதும் மஞ்சளாக தெரியும்.உன் புத்தி பணத்தில் இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் அப்படி இருக்காது. முடிந்தால் நல்லவனாக மாறு” எனத் தெரிவித்துள்ளார்.




Advertisement

Advertisement