• Jul 25 2025

பிரபல வில்லன் நடிகருக்கு வந்த திடீர் வியாதி.. அதுவும் குணப்படுத்த முடியாத ஒரு நோயா.. கவலையில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் புரூஸ் வில்லிஸ் 1980 ஆம் ஆண்டு 'தி ஃபர்ஸ்ட் டெட்லி சின்' என்ற படத்தில் நடித்தன் மூலம் சினிமாவில் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர். பின்னர் 'டை ஹார்ட்' என்ற திரைப்படத்தில் 'ஜான் மெக்லேன்' என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்து அதிரடி ஹீரோவாக சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அந்தப் படம் நான்கு பாகங்களாக வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 


இப்படத்தினைத் தொடர்ந்து 'அபோகாலிப்ஸ், லுக் ஹூ இஸ் டாக்கிங், ஹட்சன் ஹாக், போ வெயின்பெர்க் இன் பில்லி பாத்கேட், தி லாஸ்ட் பாய் ஸ்கவுட்' ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவ்வாறு பல படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் டெமி மூர் என்பவரை 1987ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். இத்தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். 


இதையடுத்து பல ஆண்டுகள் தனிமையில் இருந்த புரூஸ் வில்லிஸ் 2009ம் ஆண்டு எம்மா ஹெமிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் என, புரூஸ் வில்லிஸூக்கு மொத்தம் 5 குழந்தைகள் இருக்கிறார்கள்.

இவர் உடல்நலக் குறைவு காரணமான கடந்த ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் புரூஸ் வில்லிஸ், மூளை செல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தற்போது வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இந்த நோய் பாதித்தவர்கள் பேசுவது,எழுதுவது, நடப்பது, புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும். 


அதுமட்டுமல்லாது இந்த நோய்க்கு தற்போது எந்த சிகிச்சையும் இல்லை. இனி வரும் காலத்தில் நிச்சயம் இந்தநிலை மாறும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று புரூஸ் வில்லிஸ் குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். நோயினால் பாதிக்கப்பட்டுள்ள புரூஸ் வில்லிஸ் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement