• Jul 24 2025

50 வயசு ஆச்சு கிஸ் கூட அடிக்க தெரியாதா? பிரபல நடிகரை மூஞ்சிக்கு நேராகவே கேட்டு அசிங்கப்படுத்திய பயில்வான்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் எஸ்ஜே சூர்யா, ஹீரோவாக நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் பொம்மை.

ஒரு பொம்மையின் மீது காதல் கொள்ளும் இளைஞனின் மனச்சிதைவு, அதன் பிறகு ஏற்படும் விளைவு தான் இந்த படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. இந்த படம் கடந்த வாரம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதன் ட்ரெய்லர் வெளியாகும் போதே, அதில் கதாநாயகி பிரியா பவானி ஷங்கருக்கு எஸ்ஜே சூர்யா லிப் டு லிப் கிஸ் அடித்த காட்சி இடம் பெற்றிருக்கும். ஆனால் படம் ரிலீஸ் ஆனதும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எஸ்ஜே சூர்யாவிடம், ‘50 வயசு ஆயிடுச்சு இன்னும் சிங்கிளாக இருக்கும் உங்களுக்கு, கிஸ் கூட அடிக்க தெரியாதா? பொம்மை படத்தில் நீங்க அடித்தது கிஸ்ஸா!’ என பொதுவெளியில் எஸ்ஜே சூர்யாவின் மூஞ்சிக்கு நேராகவே கேட்டு அசிங்கப்படுத்தினார்.

அத்துடன் அந்த முத்தக் காட்சியில் இருவரும் எதற்கு வாயை மூடி கொள்கிறீர்கள்’ என்றும், அந்த முத்த காட்சிக்கு விளக்கமும் கேட்டிருக்கிறார். இதற்கு எஸ்ஜே சூர்யா சிரித்துக்கொண்டே எந்த பதிலும் சொல்லவில்லை.

இந்தப் படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக சேர்ந்து பார்க்க வேண்டும் என்ற கோணத்தில் தான் எஸ்ஜே சூர்யா நடித்திருக்கிறார். இது என்ன இங்கிலீஷ் படமா? இஷ்டத்திற்கு கிஸ் அடிக்க, பொம்மை படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சி ஒரு காதலின் அடையாளம், அவ்வளவுதான் என்று அதன்பின் விளக்கம் அளித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement