• Jul 25 2025

அரண்மனையில் இருந்த காலகட்டத்தில் ஒருமுறை இப்படியும் நடந்து கொள்ள முயன்றுள்ளார்- மேகன் மெர்க்கலின் தொடர்பாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

பிரித்தானிய ராஜகுடும்பம் தம்மை வெறுத்து வெளியேற்ற வேண்டும் என்பதே முதல் நாளில் இருந்தே மேகன் மெர்க்கலின் விருப்பமாக இருந்தது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.மேகன் மெர்க்கலின் அந்த பிடிவாத குணமே அவரையும் இளவரசர் ஹரியையும் ராஜகுடும்பத்தில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேற வைத்தது எனவும் கூறுகின்றனர்.மேலும், மேகனுக்கு அனைத்து உதவிகளும் அரண்மனை செய்திருந்தாலும், அதை அவர் மொத்தமாக மறந்துவிட்டார் என்றே குறிப்பிடுகின்றனர். மட்டுமின்றி, ஒவ்வொருமுறையும் தமது நடவடிக்கையால் அரண்மனை அளித்த ஆதரவை அவர் பொய்யாக்கி வந்தார் எனவும் கூறுகின்றனர்.


மேகன் பிரித்தானிய ராஜகுடும்பத்தில் நுழைந்த அன்று முதலே, தம்மை அரண்மனை வெறுத்து வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டார் என்றே தெரியவந்துள்ளது.மேலும், அரண்மனையில் இருந்த காலகட்டத்தில் ஒருமுறை தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்ததாக மேகன் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அரண்மனை ஆதரவாளர் ஒருவர், அப்படி ஒரு சூழலில் மேகன் இல்லாமல் இருந்தால் தான் வியப்பு என குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

Advertisement