• Jul 24 2025

காதலில் விழுந்த 'என்ஜாய் எஞ்சாமி' பாடகர் தெருக்குரல் அறிவு... அவரோட காதலி யார் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில் 'உரிமையை மீட்போம்' என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு.

அதனைத் தொடர்ந்து இவர் 'வடசென்னை, வந்தா ராஜாவாதான் வருவேன், நட்பே துணை, இரண்டாம் உலகப் போரின் கடைசிகுண்டு, பட்டாஸ், டகால்டி, நாடோடிகள் 2, நான் சிரித்தால், ஜிப்ஸி, சூரரைப் போற்று, துக்ளக் தர்பார்' உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் பாடி உள்ளார்.


அதிலும் குறிப்பாக சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் அவரது மகள் பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து உருவாக்கிய 'என்ஜாய் எஞ்சாமி' என்ற பாடல் வெளியாகி உலகளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதில் ஆதிக்குடிகளின் வேர்களைத் தொட்டு பாடல் வரிகளை உருவாக்கி இருந்தார் தெருக்குரல் அறிவு. 

பல நூறு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த அந்த பாடல் தெருக்குரல் அறிவை சர்வதேச ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தது. இவர் பாடல்கள் எழுதிப் பாடுவது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகிறார்.


இந்நிலையில் தற்போது அவர் காதலில் விழுந்துள்ள தகவல் ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே தனது காதலியை வித்தியாசமாக வெறும் கால்களை மட்டுமே காட்டி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அறிமுகப்படுத்தி இருந்தார். அதில் "For miles together.. We are the wildest love of our ancestors kalpana_ambedkar என் திமிரான தமிழச்சி" எனக் குறிப்பிட்டிருந்தார்.


தெருக்குரல் அறிவினுடய இந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் பலரும் வாவ்.. சூப்பர் வாழ்த்துக்கள்.. என அந்த ஜோடியை வாழ்த்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கல்பனா அம்பேத்கர் என தனது காதலியின் முகத்தை காட்டாமல் வெறும் கால்களை காட்டி காதலை அறிவித்தாலும், நல்ல வேளையாக ஐடியை அறிவு ஷேர் செய்த நிலையில், அந்த கல்பனா யார் என்பதை ரசிகர்கள் தற்போது கண்டு பிடித்துள்ளனர்.


அதாவது தெருக்குரல் அறிவை போலவே இவரும் பெரியார் மற்றும் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சித்தாந்தங்களின் வழி நடப்பவர் என்பது தெளிவாகிறது. அத்தோடு கல்பனாவின் உடைய இன்ஸ்டா பக்கத்தில் தெருக்குரல் அறிவு குறித்த ஏராளமான போஸ்ட்டுகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement