• Jul 25 2025

புதுப் பொலிவுடன் மீண்டும் வெளியாகவுள்ள எந்திரன் திரைப்படம்- அதுவும் எப்போது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட படங்களை இயக்கி வரும் இயக்குநர் தான் ஷங்கர். இவர் தற்பொழுது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை பிரமாண்டமாக இயக்கி வருகின்றார். இப்படத்தின் பாதிப்படப்பிடிப்புக்கள் நிறைவடைந்துள்ளன.

ஷங்கர் இயக்கத்திவ் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று தான் எந்திரன். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.


இந்தப் படம் வெளியாகி தற்பொழுது 13 ஆண்டுகள் கழிந்துள்ளது.தற்போது இந்த படத்தை மீண்டும் வெளியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறது சன் பிக்சர்ஸ்.தற்போது எந்திரன் படத்தை 4K Ultra HD தரத்தில் Dolby Vision and Dolby Atmos உடன் ரீமாஸ்டர் செய்து தான் வெளியிட இருக்கின்றனர். வரும் ஜூன் 9ல் சன் நெக்ஸ்ட் தளத்தில் எந்திரன் வெளியாக இருக்கிறது.


இந்த அறிவிப்பை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள். இதற்கு முன் எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்களின் படங்களை தான் இப்படி புது பொலிவில் பார்த்திருப்போம், தற்போது எந்திரன் படமும் அப்படி புது டெக்னலாஜிக்கு தகுந்தபடி மாற்றம் பெற்று இருப்பது ரசிகர்களை பெரிதும் ஆச்சரியப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement