• Jul 24 2025

சேலை அட்ஜஸ்ட் செய்தாக் கூட ஜூம் பண்றாங்க.. நடிகை வாணி போஜன் ஓபன் டாக்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் வாணி போஜன். இவர் தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

வாணி போஜன் 2022 -ம் ஆண்டு வெளியான "ஓ மை கடவுளே" திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு போன்ற பல படங்களை லைன் அப் வைத்துள்ளார்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வாணி போஜன் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், " சினிமாவில் யாரும் என்னிடம் யாரும் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் சில சோசியல் மீடியாக்களில் என்னை குறித்து தவறான செய்திகள் பரப்பி வருகின்றனர். அது எனக்கு கஷ்டமாக இருக்கும்".

"சேலையை அட்ஜஸ்ட் செய்வதை கூட ஜூம் பண்ணி எடுப்பார்கள். அது நமக்கு சங்கடமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement