• Jul 25 2025

இனி என்னை ‘டாக்டர் Hip Hop தமிழா’ என்னு கூட அழைக்கலாம்! – நடிகர் ஆதி கூறிய தகவல் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, மரகத நாணயம் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணுடன் இணைந்து ‘வீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஹிப்ஹாப் ஆதி சிறிது நாட்கள் ஓய்வு எடுத்ததாக தெரிகிறது.

 இவர் திரைத்துறையில் இருந்து சற்று ஓய்வு எடுத்துள்ளார், இப்பொது அந்த ஓய்வு ஏனென்று தெரிந்துவிட்டது. சமீபத்தில், செய்தியாளர்களை சந்தித்த ஹிப்ஹாப் தமிழா ஆதி,  ஒரு சந்தோஷமான விஷயம் நான் PhD முடித்துள்ளேன். இனிமேல் என்னை ‘டாக்டர் ஹிப்ஹாப் தமிழா’ என்று அழைக்கலாம்.

இது, நான் படித்து வாங்கிய டாக்டர் பட்டம், Music Entrepreneurship-ல் PhD முடித்துள்ளேன். எனக்கு தெரிந்து இந்த துறையில் ஆராய்ச்சி செய்து PhD பெறுவது, இந்தியாவில் இதுவே முதல்முறை  என்று  ஹிப்ஹாப் தமிழா நெகிழ்ந்து பேசினார்.




Advertisement

Advertisement