• Jul 25 2025

எல்லாமே சுத்த பொய்யுங்க எதுவுமே தரல- பிக்பாஸ் ஷோவின் ரகசியத்தை உடைத்த குயின்சி

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவி தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய வந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. கடந்த ஐந்து சீசன்களை விட, சீசன் 6 நிகழ்ச்சி பிரச்சனைகளுக்கு சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள்் கலந்து கொண்டனர்.


மேலும் டைட்டில் வின்னராக அசீம் தெரிவு செய்யப்பட்டார். அசீம் டைட்டில் வின்னர் ஆனது பலரிடையே சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. அத்தோடு இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஒவ்வொருத்தரும் பல்வேறு சேனல்களுக்கு பேட்டியளித்தும் வருகின்றனர்.


இந்த நிலையில் தற்பொழுது குயின்சி பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் சாப்பாட்டு விஷயம் எல்லாம் சும்மா என்று தான் சொல்லனும். காலையில எழுந்ததும் உப்புமா அதே மாதிரி ரைஸ் மற்றும் பருப்பு தான் அனுப்பி வைப்பாங்க.


அதை தான் நாங்க சாப்பிட்டு இருப்போம் சாப்பாடு எல்லாம் எங்களுக்கு சரியாகத் தரல என்று ஓபனாக பேசியிருக்கின்றார். இவரின் இந்த கருத்து தற்பொழுது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement