• Jul 26 2025

"எனக்கு பிடித்தமான இடம் இது"- கணவருடன் ரொமாண்டிக்கான போட்டோ போட்ட மஞ்சிமா மோகன்

stella / 2 years ago

Advertisement

Listen News!


இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர் தான் கௌதம் கார்த்திக். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் அடுத்தாக பத்து தல என்னும் திரைப்படம் வெளியாகவுள்ளது.இப்படத்தில் சிம்புவும் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.


இவர் கடந்த ஆண்டு நவம்பவர் 28ம் தேதி நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.


இவர்களின் திருமண புகைப்படங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்றன.சமீபத்தில் நடிகை மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் இருவரும் ஜோடியாக பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.


இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் கௌதம் கார்த்திக்கை அணைத்திருக்கும் க்யூட்டான புகைப்படத்தை பகிர்ந்து "எனக்கு பிடித்தமான இடம் இது" என பதிவிட்டுள்ளார்.  கடற்கரை பிண்ணனியில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.


Advertisement

Advertisement