• Jul 26 2025

பெண்ணாலே பட்டது எல்லாம் போதும்- திடீரென வீதியில் இறங்கி பாக்கியலட்சுமி சதீஷ் செய்த காரியம்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் தொடர்களில் ஒன்றாக உள்ளது. டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது. ரசிகர்களின் மனம்கவர்ந்த இந்தத் தொடர் பல எபிசோட்களை கடந்து ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது. இந்தத் தொடரின் கோபி -பாக்கியா மற்றும் ராதிகா கேரக்டர்கள் லீட் கேரக்டர்களாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

 கோபியாக சதீஷ், பாக்கியாவாக சுசித்ரா மற்றும் ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களை மையமாக கொண்டு மற்ற கேரக்டர்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடரில் கோபியாக நடித்துவருகிறார் நடிகர் சதீஷ். இவர் முன்னதாக சில சீரியல்கள், படங்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி தொடர் இவருக்கு மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. 


இந்தக் கேரக்டருக்கு இவர்தான் பொருத்தம் என்று கூறும் வகையில் இந்த கேரக்டர் அமைந்துள்ளது. தான் ஆசைப்படும் வாழ்க்கைக்காக திருமணமான பிள்ளைகளுடன் தான் வாழ்ந்துவந்த வாழ்க்கையை உதறித்தள்ளும் கோபி, தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து படும் பாட்டை இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் கோபி தன்னுடைய லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியொக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது வீதியைக் கூட்டும் வீடியோவைப் பகிர்ந்து பட்டது போதும் பெண்ணாலே இதை பட்டினத்தாரும் சொன்னாரே அவ சுட்டது போதும்..ம்..ம் சிவ சிவ சிவனே… என்ற பாடலையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement