• Jul 24 2025

பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட போலி டாக்டர் பட்ட விவகாரம்.. தலைமறைவான முக்கிய நபர் அதிரடியாகக் கைது..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கௌரவ டாக்டர் பட்டங்கள் தொடர்பான சர்ச்சைக் கருத்துக்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கின்றன. அதாவது இந்த நிகழ்ச்சியானது சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பின் கீழ் நிகழ்த்தப்பட்டது. 


இதில் நடிகர் வடிவேலு, சாண்டி மாஸ்டர், ஈரோடு மகேஷ் உட்பட 50 இற்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு வழங்கப்பட்டவை அனைத்தும் போலியானவை என ஒரு தகவல் பரவியது. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றது.


மேலும் அண்ணா பல்கலைக்கழகம் அளித்த புகாரின் பேரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ஏமாற்றுதல், மோசடி செய்தல் உட்பட 7பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து விழா நடத்திய அமைப்பினுடைய இயக்குநர் ஹரீஷ் தலைமறைவாகி இருந்தார்.

இந்நிலையில் தலைமறைவான ஹரீஷை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement