• Jul 25 2025

ஏகே 62 படத்திற்காக தனது பல நாள் கனவை தள்ளிவைத்த அஜித்..நடந்தது என்ன.?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம்  தான் ஏகே 62. முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.

ஆனால், தற்போது அவர் வெளியேறியதன் பின்னர் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கப்போகிறார். இப்படத்தின் கதையை தற்போது முழுமையாக திரைக்கதை மற்றும் வசனங்களுடன் மகிழ் திருமேனி எழுதி வருகிறாராம்.


விக்னேஷ் சிவன் கூறிய ஒன் லைன் நன்றாக இருந்ததினால் தான் படத்தை முதலில் கமிட் செய்துள்ளனர். ஆனால், அதன்பின் அவர் கூறிய முழு கதை அஜித்திற்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் திருப்தியளிக்கவில்லை என்பதினால் தான் அவர் இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

அந்த நிலைமை மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காக தான், முழு கதை, திரைக்கதை எல்லாம் தயாரான பின் அஜித் கதை கேட்டு, அறிவிப்பை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.


அத்தோடு இப்படத்தின் கதையை முழுமையாக கேட்பதற்காக உலகம் முழுவதும் பைக் ரைடு செல்லவேண்டுமென்ற தன்னுடைய பல நாள் கனவை தள்ளிவைத்துவிட்டாராம் அஜித்.

தனக்காக அவசர அவசரமாக கதையை முடிவு செய்து, படப்பிடிப்பு செல்லவேண்டாம் என்றும், பொறுமையாக கதையை தயார் செய்து படப்பிடிப்புக்கு செல்லலாம் என்று அஜித் கூறியுள்ளாராம்.

Advertisement

Advertisement