• Jul 25 2025

வாகன விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்... திடீர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாகவே திரையுலகில் பல உயிரிழப்புக்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் தற்போது இலங்கைத் திரையுலகிலும் ஒரு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.


அதாவது இலங்கை திரையுலகில் பிரபலமான நடிகர் ஜெக்சன் எண்டனி காலமானார். 1958 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி பிறந்த நடிகர் ஜெக்சன் எண்டனி வாகன விபத்தில் சிக்கி கடந்த 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை தனது 65 ஆவது வயதில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.


இவரின் இறப்பானது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement