• Jul 25 2025

அர்ஜுன் கண் முன்னாடியே தமிழைக் கட்டிப்பிடித்த கோதை- பணம் கேட்டுச் சென்ற தமிழுக்கு காத்திருந்த அதிர்ச்சி- Thamizhum Saraswathiyum Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தமிழின் கம்பெனி எரிந்தது தனககு சம்மந்தமில்லை என்பது போல அர்ஜுன் கோதையிடம் வந்து பேசிட்டு இருக்கின்றார். இதனால் கடுப்பான கோதை அர்ஜுனை ஓங்கி அறைந்ததோடு உன்னுடைய தில்லாலங்கடி வேலை எதுவும் எனக்கு தெரியாது என்று நினைச்சிட்டு இருக்கிறியா என திட்டுகின்றார். தமிழ் பீனிக்ஸ் பறவை மாதிரிடா இதிலிருந்து சீக்கிரமா மீண்டு வருவான்.


உன் பேச்சை நம்பி வீட்டை விட்டு அனுப்பிய போது கூட அவன் தன்னுடைய சொந்த பணத்தில இந்த கம்பெனியை ஆரம்பிச்சவன்.எங்க கிட்ட இரு்து சொத்தை பறிச்ச நீ எப்படிபட்டவன் என்பது எனக்கு தெரியும். உன்னோட பேச்சை நம்ப நான் பழைய கோதை இல்லை, உன்கிட்ட இருந்து சீக்கிரமாவே சொத்தை திரும்ப வாங்கிக் கொள்ளுவோம் பாரு, இங்க நின்று அடிவாங்கியே சாகாமல் ஓடித் தப்பு என்று கலைத்து விடுகின்றார்.

கோதை தன்னைப் பற்றி பெருமையாகப்பேசியதைப் பார்த்த தமிழ் அம்மா என்று கோதையை அழைக்க கோதை சந்தோஷப்படுவதோடு தமிழைக் கட்டிப்பிடிதது அழுகின்றார். இதனால் எல்லோரும் சந்தேசப்படுகின்றனர். பின்னர் அர்ஜுன் வீட்டுக்கு போனதும் தமிழுக்கு என்ன ஆச்சு என்று விசாரிக்கின்றார். 


அப்போது அர்ஜுன் தமிழ் சேருக்கு ஒன்றும் ஆகல கம்பெனி தீப்பற்றி எரிஞ்சதுக்கு நாம தான் காரணம் என்ற மாதிரி திட்டி அனுப்பிட்டாங்க என்று சொல்லி நடிக்க ராகினியும் நீங்க எவ்வளவு நல்லது செய்ய போனாலும் அவங்களுக்கு அது புரியாது என்று சொல்லுகின்றார். பின்னர் ராகினியை சமாதானம் செய்து அனுப்பிய பின்னர் தன்னுடைய குடும்பத்திடம் நடந்தது பற்றி சொல்கின்றார்.

மறுபுறம் கம்பெனியை சரிபண்ண தமிழ் இன்சூரன்ஸ் பணத்திற்காக பாங்கிற்கு போய் நிற்கின்றார். அங்கு பணம் தரமுடியாது உங்க கவனயீனத்தினால் தான் விபத்து நடந்திருக்கு அதனால பணம் தரமுடியாது என்று சொல்ல நமச்சியும் தமிழும் அதிர்ச்சியடைவதோடு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கின்றனர்.


மேலும் கோதை எல்லோரிடமும் பேசிட்டு இருக்கும் போது ராகினி போன் பண்ணி கம்பெனியை சரி செய்ய நான் வேணும்னா பணம் தரட்டுமா என்று கேட்கின்றார். இதனால் கடுப்பான கோதை ராகினியை திட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement