• Jul 26 2025

தவறான மசாஜ் செய்ததால் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட பாரிய விளைவு- இப்போ எப்படி இருக்கிறார் என்று தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் கதாநாயகனாகவும் காமெடி நடிகராகவும் பல படங்களில் நடித்தவர் நடிகர் எஸ்வி சேகர். இது தவிர பல நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். தற்பொழுதும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.

இது தவிர அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக இருக்கும் இவர்  அதிமுக கட்சியின் சார்பில் 2006-11 ஆம் ஆண்டுகளில் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராக இருக்கிறார்.  


இந்நிலையில் நடிகர் எஸ்வி சேகர் சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள மெட்ராஸ் ஈஎன்டி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், "கடுமையான வாந்தியுடன் கூடிய கடுமையான தலைச்சுற்றல் காரணமாக ஆர் ஏ புரத்தில் உள்ள மெட்ராஸ் ENT மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டேன்.


இந்த விளைவை ஏற்படுத்திய ஆயில் மசாஜ் செய்ததற்கு எனது ஆர்வக்கோளாறு தான் காரணம். கடவுள் அருளால் & டாக்டர் மோகன் காமேஸ்வரன் சிகிச்சையால் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். இப்போது வீட்டில் முழு ஓய்வு எடுக்கிறேன். ஒவ்வொரு நாளும் நாம் ஒரு பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த முறை இனி  ஆயில் மசாஜ்கள் செய்ய கூடாது என்று கற்றுக் கொண்டேன் உங்கள் பிரார்த்தனைகளுக்காக அனைவருக்கும் நன்றி" என எஸ்வி சேகர் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement